உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மியன்மார் பழங்குடியினர் மீது இரானுவம் தாக்குதல் 19 பேர் பலி

மியன்மார் இராணுவத்திற்கும் பழங்குடியின கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் 19 பேர் பலியாகியுள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சீன எல்லை அருகே மியன்மாரின் வடக்கே ஷான் பகுதியில் பல்வேறு ஊடுருவல் குழுக்கள் அதிகளவில் சுயாட்சி கோரி போராடி வருகின்றன.

இந்த நிலையில், மியன்மார் நாட்டு இராணுவத்திற்கும் ”டாங் தேசிய விடுதலை இராணுவம்” என்ற கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது.

மியன்மாரில் ராகீன் பகுதியில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் இன அழிப்பு முயற்சியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது. எனினும், இராணுவத்தினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் மியூஸ் பகுதியில் உள்ள இரு இராணுவத் தளங்கள் மற்றும் பாலம் ஒன்றின் அருகே 3 இடங்களில் இராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Related posts

ஞானசார தேரரை கைதுசெய்யாமை! பிரச்சினை

wpengine

பதியுதீன் கோரிக்கை விடுத்தால் நாடாளுமன்றகூட்டத்திற்கு அழைத்து வர நடவடிக்கை

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine