பிரதான செய்திகள்

மியன்மார் அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம்

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மார் அகதிகளுக்கு வேறொரு நாட்டில் புகலிடம் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா சபையின் யூ.என்.எச்.சி.ஆர் (UNHCR) இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், மிரிஹானா தடுப்பு முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை கல்கிஸ்ஸை பகுதிக்கு மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதுவரையில் அவர்களுக்கான உணவு, தங்குமிட வசதி மற்றும் கல்வி நடவடிக்கைகளையும் வழங்க யூ.என்.எச்.சி.ஆர் தீர்மானித்துள்ளது.

எனினும், மிரிஹானா தடுப்பு முகாமில் உள்ள மியான்மார் அகதிகளை இடம் மாற்றுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.

இதனால் எதிர்வரும் 17ஆம் திகதி காங்கேசன்துறை நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்தி நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி காலை இலங்கைக்குள் படகின் மூலம் சட்டவிரோதமாக நுழைந்த மியன்மார் நாட்டை சேர்ந்த 30 ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் கைது செய்யப்பட்டு மிரிஹானா சட்டவிரோத தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் ரிசேட்டி வந்த பிரபாகரன்

wpengine

நாட்டில் அரிசியின் விலை அதிகரித்துள்ளது! கிராம உத்தியோகத்தர்களுக்கு “டெப்” வழங்கிய ஜனாதிபதி

wpengine

மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு?

wpengine