செய்திகள்பிரதான செய்திகள்

மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு.

மொரட்டுவையில் அடுக்குமாடி ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று ஹோட்டல் பணிபுரிந்த இளைஞன் மின் தூக்கியை பயன்படுத்தியுள்ளார். இதன்போது, மின் தூக்கி அமைப்பு செயலிழந்து அறுந்து விழுந்ததில் இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மே தினம் மாற்றம்! 7ஆம் திகதி

wpengine

ரணில்-பசில் இரகசிய சந்திப்பு! பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர்

wpengine

பிரபாகரனுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர்

wpengine