பிரதான செய்திகள்

மிக விரைவாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை! அனுரகுமார

பாராளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவு குறித்து தான் ஏற்கனவே அறிந்திருந்ததாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டும் விடயங்களை, அவ்வாறே ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியில் இருப்பவர்களுக்கும் இந்த சபைக்கும் இடையே பெரும் முரண்பாடு உள்ளததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் வேட்பாளராகப் முன்னின்ற போதே, இவ்வாறானதொரு முடிவு தான் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிக விரைவாக தேர்தல் ஒன்றை நடத்துமாறும் அவர் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.

Related posts

1ம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

Editor

வவுனியா அரச நிறுவனத்தில் தமிழ் மொழிக்கு பாதிப்பு

wpengine

தொண்டர் ஆசிரியர் நியமனம் 182 பேர் சிபாரிசு

wpengine