மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் துாங்கிய மஸ்தான் (பா.உ)

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (02/06/2016) காலை முல்லைத்தீவு கச்சேரியில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன், மஸ்தான் எம்.பி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பான நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு அதற்கான உரிய தீர்வும் அங்கு மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பிரச்சினை முடிந்த பின்னர் அடுத்த நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடப்பட்ட போது, திடீரென குரல் கொடுத்த மஸ்தான் எம்.பி, காணிப் பிரச்சினைக்கு என்ன நடந்தது? என வினவினார். கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளும், அரசியல் முக்கியஸ்தகர்களும் பெரிய சத்தத்துடன் கொல்லெனச் சிரித்தனர்.

அப்போதுதான் தெரிய வந்தது, இவ்வளவு நேரமும் இணைத்தலைவர் மஸ்தான் எம்.பி தூங்கி வழிந்திருக்கிறார் என்று.

பொறுப்பான கூட்டம் ஒன்றில், பொறுப்பு வாய்ந்த தலைவர் ஒருவரின் இலட்சணமா இது?

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares