மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாகியுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு செயற்பாடாக மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய மற்றும் பொருள் விநியோகம் தவிர்ந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.


ஏற்கனவே மேல் மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஊரங்குச்சட்டம் நவம்பர் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி நேற்று மாலை அறிவித்தார்.


அத்துடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் முன்னர் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares