பிரதான செய்திகள்

மாளிக்கைக்காடு ஸகாத் வினியோக நிகழ்வு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது- மாளிகைக்காடு பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

நிதியத்தின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, மௌலவி யூ.எல்.எம்.முபாரக், மௌலவி ஐ.எல்.எம்.ரஹ்பி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதன்போது சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களை சேர்ந்த 95 வறிய குடும்பத்தினருக்கு ஐம்பது இலட்சத்து 45642 ரூபா பணம் மற்றும் 178.5 மூடை நெல் என்பன பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பைத்துஸ் ஸக்காத் நிதியத்தின் பணிப்பாளர் ஏ.சி.சமால்தீன் தெரிவித்தார்.

Related posts

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

wpengine

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமீர் அலி விஜயம்.

wpengine