மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனுசரணையுடன் மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் பெண்களுக்கான விஷேட விழிப்புணர்வு நிகழ்வு எதிர்வரும் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.மணிக்கு ஏறாவூர் அல் மர்கஸூல் இஸ்லாமி தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்;ஜிதில் இடம்பெறவுள்ளது.

இதில் மார்புப்புற்று நோயும்,நவீன சிகிச்சை முறைகளும் எனும் தலைப்பில் அம்பாறை அரச வைத்தியசாலை வைத்தியரும்,புற்றுநோய் விஷேட வைத்திய நிபுணருமான டாக்டர் ஏ.இக்பால் சிறப்புரையாற்றவுள்ளனர்.
அண்மைக் காலமாக புற்று நோயின் தாக்கமானது மிகவும் தீவிரமாக முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இது தொடர்பான விழிப்புணர்வினை பெண்கள் மத்தியில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் கருதி ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு முழுமையான அனுசரணையை வழங்கியுள்ளது.
எனவே இச் சந்தர்ப்பதத்தை தவறவிடாது அணைத்து இஸ்லாமிய பெண்களையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் வேண்கோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares