பிரதான செய்திகள்

மாணவியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அரசியல்வாதி

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தென்னிலங்கை அரசியல்வாதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிருஷாந்த புஸ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

16 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புஸ்பகுமார, அக்மீமன பொலிஸில் சரணடைந்தார்.

சந்தேகநபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 7 கைதிகள் விடுதலை !

Maash

அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு! வாகனம் தொடர்பாக

wpengine

காலி உணவகத்தில் தாக்கப்பட்ட சம்பவம் – 11 ஊழியர்கள் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

Maash