பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தல் விருப்பு வாக்கு அடிப்படையில்

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துவதற்கு சில அரசியல் கட்சிகள் இணங்கியுள்ளன.

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டதனால் பல உள்ளூராட்சி மன்றங்களை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான ஓர் நிலைமை மாகாணசபைகளில் ஏற்படுவதனை தவிர்க்கும் நோக்கில் விருப்பு வாக்கு அடிப்படையிலேயே தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

சிறிய கட்சிகள் பல விருப்பு வாக்கு அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி வருகின்றன.
இந்த நிலைப்பாட்டையே தமது கட்சியும் கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் தேர்தல் நடத்துவதற்கு நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அமுலில் இருந்த விருப்பு வாக்கு அடிப்படையில் நடத்துவதற்கான திருத்தங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

றிஷாட் மற்றும் ஹக்கீம் கட்சியின் தேசிய பட்டியல் முரண்பாடு

wpengine

பொதுபல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? இப்றாஹிம் கேள்வி

wpengine