மாகாண சபைக்கு சஜித்திடம் தஞ்சமடையும் ரவி,தயா

ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களான அதன் உப தலைவர் ரவி கருணாநாயக்க மற்றும் பொருளாளர் தயா கமகே ஆகியோர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தியின் விருப்பத்தை கேட்டுள்ளதுடன், அந்த கட்சியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


எனினும் ஐக்கிய மக்கள் சக்தி அணியில் இருவர்களுக்கு இரண்டாம் வரிசையே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், கட்சியில் பதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பதிலாக தமது அரசியல் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளனர்.


எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டால், பொதுத் தேர்தலை விட படுதோல்வியை சந்திக்க நேரிடும் என ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே ஆகியோர் கருதுவதாக பேசப்படுகிறது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கருணாநாயக்க கொழும்பு மாவட்டத்திலும் தயா கமகே அம்பாறை மாவட்டத்திலும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares