பிரதான செய்திகள்

மஹிந்த வெளியேற்றம் மைத்திரி உள்ளே! காரணம் பேஸ்புக் -ஜீ.எல்.பீரிஸ்

எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் சூப்பர் அமைச்சர் என்பது பொய்யானது என அரசாங்கம் நாடகமாடினாலும், அதுவே உண்மை என, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த சூப்பர் அமைச்சர் பதவி மூலம் அதிகாரம் பாரியளவில் பகிரப்படவுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு சமமான பலத்தின் மூலம் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் அதிகாரமும் கூட இவர்களுக்கு காணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பேஸ்புக் பக்கம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது எனவும், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பேஸ்புக் மூலம் நாட்டில் நடக்கும் அனைத்து ஊழல், மோசடிகளையும் மக்கள் அறிந்து கொள்ளவும், மக்களுக்கு தெளிவுபடுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என இதன்போது சுட்டிக்காட்டிய பீரிஸ், இப்படியான பேஸ்புக் பக்கங்களை முடக்கி உண்மை மக்களை சென்றடையும் வாய்ப்பை இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் தேவையாக இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றியதோடு, மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு பிரதான சக்தியாக இருந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் முக்கியத்துவத்தை அரசாங்கம் தற்போது மறந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூக வலைத்தளம் மூலம் சமூகத்துடன் பாரிய பயணம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என குறிப்பிட்ட அவர், இதற்கு மக்களும் தமது பங்களிப்பை வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

Related posts

அடுத்த தேர்தல் எதுவாக இருக்கும்…?

wpengine

வாகன இலக்க தகடுகளில்! வாவொலி சமிக்கை

wpengine

அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு

wpengine