மஹிந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு 72 மணித்தியால அவகாசம்- பிக்குகள் ஆவேசம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பை அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீண்டும் வழங்காது போனால் மக்களை அழைத்துக் கொண்டு பாதையில் இறங்கப் போவதாக பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தேரர் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவது அவரது உயிருக்கு ஆபத்தானது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares