Breaking
Wed. Dec 11th, 2024

(எம்.ஆர்.எம்.வஸீம்)

எதிரணியின் போராட்டத்தால் அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மஹிந்தவின் தந்தை உயிர்பித்து வந்தாலும் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் ஆட்சிபுரிந்த ஜனாதிபதிகளில் மஹிந்த ராஜபக்ஷ் மாத்திரமே பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ளார். அத்துடன் சுதந்திர கட்சியை பிளவுபடுத்தியவரும் இவர் தான் என்பது நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தின் பின்னர் தெரியவரும்.

 

புதிய கட்சி அமைக்கப்போவதாக தெரிவித்து வந்த கருத்துக்கள் தொடர்பாகவும் அவர் இதுவரை தெளிவாக பதில்கூறாமல் மறைத்து வந்தார். இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இவர் கலந்து கொள்வதன் மூலம் அது வெளிச்சத்துக்கு வரும். அத்துடன் கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களே மஹிந்தவின் பின்னால் இருக்கின்றார்கள். திருடர்கள் மேற்கொள்ளும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் அவர்களுக்கும் அவப்பெயரே ஏற்படும். ஆகையினால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இதில் கலந்கொள்வதை தடுக்க வேண்டும்.

எனவே எதிரணியின் போராட்டத்தால் அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அத்துடன் இவர்களுடன் இருப்பவர்களில் பிரதானமானவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்தின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் ஆகையினால் இவர்களின் பொய்ப்பிரசாரங்கள் மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *