பிரதான செய்திகள்

மஹிந்த மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொள்ள முயற்சி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க சில ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்க்கட்சிக்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தற்போது மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு தான் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய பெறுமதி மிக்க வாக்குகளை பாதுகாக்க வேண்டுமாயின் மக்கள் தேசிய சக்திக்கே வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆனையிறவு உப்பளம் ‘ரஜ லுணு’ என்ற பெயரில் கையளிப்பு..!

Maash

சுவரொட்டிக்கும் சிவசேனாவுக்கும் தொடர் இல்லை! தலைவர்

wpengine

மஹிந்தவுக்கும் மங்களராமய விஹாதிரபதிக்கும் தொடர்பு

wpengine