பிரதான செய்திகள்

மஹிந்த பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு

தேசிய பாதுகாப்பு, பொருளாதார நெருக்கடி, பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தகவலை பொது எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு மஹிந்தவின் இல்லத்தில் பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு சமகால அரசியல் நிலை சம்பந்தமாக அலசி ஆராயவுள்ளனர்.

குறிப்பாக வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவது குறித்தும், இதற்காக மைத்திரி அணியின் ஆதரவைப் பெறுவது தொடர்பிலும் இதன் போது திட்டம் வகுக்கப்படலாம் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டு அதன் மீது டிசம்பர் 8ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

wpengine

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயம் இடம்மாறாது. அமைச்சர் றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

wpengine

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

wpengine