பிரதான செய்திகள்

மஹிந்தவுடன் பேச உள்ள மூன்று அமைச்சர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதற்காக ஜோன் செனவிரட்ன, அனுரபிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே ஜனாதிபதி நியமித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அடுத்து வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில், மகிந்த அணியினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

1982ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு தற்போது நஸ்டஈட்டை பெற்றார் விக்ரமபாகு

wpengine

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு..!

Maash