பிரதான செய்திகள்

மஹிந்தவுடன் சேர்ந்து நல்லாட்சிக்கு ஆதரவான கலைஞர்கள் விரைவில் போராட்டம்.

கலைஞர்களை அணி திரட்டி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து கலைஞர்களையும் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படும்.
இந்த நோக்கில் அனைத்து கலைஞர்களும் கொழும்பிற்கு அழைக்கப்பட உள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் விதம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட கலைஞர்களும் தற்போது அரசாங்கத்தை எதிர்த்து போராட ஆயத்தமாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகவும் இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

அரகலய’ போராட்டம் – வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களின் பட்டியலில் முஷாரப்புக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் வீடு.

Maash

அமைச்சர்கள் உள்ள மீள்குடியேற்ற செயலணியினை நிராகரிக்கும் விக்னேஸ்வரன்.

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம் மீதான தாக்குதல்! டான் பிரசாத் தலைமறைவு

wpengine