பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கு ஆதரவான பிக்குகளின் சத்தியாக்கிரகம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பை நீக்கியமைக்கு எதிராக, பிக்குகள் மேற்கொள்ளவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ம் திகதி காலி – தர்மபால பூங்காவில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முன்னர் முடிவு செய்யப்பட்டது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இது குறித்து கலந்துரையாடவுள்ளமையால் சத்தியாக்கிரக முடிவை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று காலை நாரஹேன்பிடவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார்.

wpengine

தழிழ் கைதிகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் சிவசக்தி ஆனந்தன்

wpengine

நிர்வாணமாக உணவு வழங்கும் ஜன்னலின் ஊடாக தப்பிய நபர் பரபரப்பு (வீடியோ)

wpengine