பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கும் ,சந்திரிக்காவுக்கும் அழைப்பு கொடுத்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி கெட்டம்பே மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்காக சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கான போதியளவு குடிதண்ணீர், கழிவறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி மகளிர் உயர்கல்லூரியின் முன் ஆரம்பமாகவுள்ள பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு ராஜ்நாத் சிங்தான் பொறுப்பு.

wpengine

4 மாவட்டங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம்!-காஞ்சன விஜேசேகர-

Editor

மானவர்களுக்கு13 வருட கட்டாய கல்வியுடன் சிறந்த எதிர்கால உருவாக்கமே கல்வி மறுசீரமைப்பு. – ஜனாதிபதி.

Maash