பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கும்,மைத்திருக்கும் முடிவு கட்டுவேன்

சதிகாரர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், பெரும்பான்மைப்பலம் இல்லாமல் போலியான ஆட்சியை நடத்தும் மைத்திரி – மகிந்த அணியினருக்கு சில தினங்களுக்குள் முடிவு கட்டுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து

வெளியிட்ட அவர், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும். இது உறுதி.
நாடாளுமன்றத்தில் மூன்று தடவைகள் போலிப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷக்கு எதிராகவும், அவர் தலைமையிலான ‘காட்போட்’ அமைச்சரவைக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

122 எம்.பிக்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவளித்தும் அது தொடர்பில் அலட்டிக்கொள்ளாமல் மைத்திரியும், மகிந்தவும் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றார்கள்.

நாட்டு மக்களின் நலனைப் பற்றி சிறிதளவும் சிந்திக்காமல் அவர்கள் சண்டித்தனம் காட்டுகின்றார்கள்.
இந்த ஆட்டம் எல்லாவற்றையும் சில தினங்களுக்குள் அடக்குவோம். ஆட்சிப்பீடம் ஏறி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம்” என்று ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரிய விரும்­பாத ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோ­த­ரிகள்

wpengine

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் மூடப்படும்

wpengine

இரா.சம்பந்தனுக்கு வீடு வழங்கிய ரணில், மைத்திரி

wpengine