பிரதான செய்திகள்

மஹிந்தவின் பேரணியில் ஒலிக்கும் விமலின் குரல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொட பேரணி இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்த பேரணியில்,கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் குரல் பதிவு ஒன்றும் ஒலிபரப்பப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனுமதி பெற்றே விமலின் இந்த குரல் பதிவு ஒலிபரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கினங்க குறித்த காணொளி 20 நிமிடங்கள் ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ,குறித்த பேரணியின் சிறப்பு உரை ஒன்றை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிர்வாணமாக உணவு வழங்கும் ஜன்னலின் ஊடாக தப்பிய நபர் பரபரப்பு (வீடியோ)

wpengine

ஜப்பானில் 96 வயதில் முதியவர்! கின்னஸ் சாதனை

wpengine

பேஸ்புக் பாவனையாளர்களிடம் வேண்டுகோள்-உதய கம்மன்பில

wpengine