பிரதான செய்திகள்

மறிச்சுக்கட்டி மக்களின் 19வது நாள் போராட்டம்! வீதிக்கு இறங்கிய கொய்யாவாடி மக்கள் (வீடியோ)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

கடந்த 19வது நாளாக வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி வரும் மறிச்சுக்கட்டி மக்களுக்கு ஆதரவாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில்  கொய்யாவாடி கிராமத்தில் வசித்து வரும் மக்கள் இன்று ஜூம்மா தொழுகையினை தொடர்ந்து கொய்யாவாடி விளையாட்டு கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாக அதன் தலைவர் கமீல் றபீஸ் தெரிவித்தார்.

 

அதனை தொடர்ந்து கொய்யாவாடி அல்-மூனவூவர் பள்ளிவாசல் உப தலைவர் எம்.கே.றயுஸ்தீன் கருத்து தெரிவிக்கையில்

முசலி மக்களின் காணிகளை சூரையாடப்படும் நோக்குடன் யாரும் தெரியாமல் வர்த்தகமானி அறிவித்தல் செய்துள்ளார்கள் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

 

மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களின் பிரச்சினையாக இதனை யாரூம் பர்க்க வேண்டாம் இந்த நாட்டில் வாழுகின்ற இருபது லச்சம் முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினையாக பார்க்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

இவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமியினை விட்டு எங்க தான் செல்வார்கள் என்று கூட தெரியாமல் தவிக்கின்றார்கள். அரசாங்கத்தின் இப்படியான நடவடிக்கையினால் இந்த மக்கள் மீண்டும் அகதியாக புத்தளம், அனுராதபுரம், கண்டி போன்ற இடங்களில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்

எனவே நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக சேர்ந்து வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யவும்,வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தூரிதப்படுத்த  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் மக்கள் சார்பாக தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொய்யாவாடி பள்ளிவாசல் நிர்வாகம், பழைய மாணவர்கள் ஊர் நலன் விரும்பிகள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் என தெரிவித்தார்.

Related posts

இனவாதம்! முதலில் விக்னேஸ்வரனை கைது செய்யுங்கள்

wpengine

மணப்பெண்ணாக மணமேடையில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

wpengine

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு! பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா

wpengine