செய்திகள்பிரதான செய்திகள்

மருத்துவமனை அனைத்திலும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை..!

கொழும்பு தேசிய மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக தெரியவருகின்றது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு செலுத்தப்படும் இன்சுலின் தேசிய மருத்துவமனை கிளினிக்கில் உள்ள நோயாளிகளுக்கு கூட வழங்கப்படுவதில்லை என்றும்,நாடு முழுவதும் உள்ள பிற மருத்துவமனைகளில் சுமார் மூன்று மாதங்களாக இன்சுலின் உட்பட பல அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் இருப்பதாகவும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் 

மருத்துவ விநியோகத் துறையிலும் அரச மருத்துவமனைகளிலும் 13 உயிர்காக்கும் மருந்துகளில் மூன்று முற்றிலும் கையிருப்பில் இல்லை என்றும்,

மருத்துவ விநியோகத் துறையில் 460 அத்தியாவசிய மருந்துகளில் 183 மருந்துகளும், 49 மருத்துவமனைகளிலும் முழுமையாக மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

 மருந்துகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தவறியதால் எழும் அவசரத் தேவை, பதிவு செய்யப்படாத, தரமற்ற மற்றும் போலியான மருந்துகளை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.

Related posts

வங்கிகளுக்கு மாத்திரம், மே 2 ஆம் திகதி விடுமுறை

wpengine

அக்கரைப்பற்று வலயத்தில் இம் மாத ஆசிரியர் சம்பளம் வழங்கப்படவில்லை! ஆசிரியர்கள் விசனம்

wpengine

உலகம் முழுவதிலும் இருந்து மக்கா நகருக்கு செல்லும் புனித ஹஜ் பயணம் தொடங்கியது.

wpengine