பிரதான செய்திகள்

மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

அவருடன் அவரது புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

இந்த  விஜயத்தை மேற்கொண்டு சென்றதாக அவரது பிரத்தியேக செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் குயின் எலிசபெத் வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் ரணிலுடன் மோதல்

wpengine

தமிழர்களுக்கு கட்டாயம் பிரதேசசபையை கொடுக்க வேண்டும்

wpengine

நாளை பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்த ரணில் சூழ்ச்சி

wpengine