பிரதான செய்திகள்

மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தரின் நியாயமற்ற இடமாற்றம்

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பது குறித்து தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


விசாரணை முடிவில் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதேவேளை், விசாரணைகள் இடம்பெறவுள்ளதால், தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ் பண்ணை சுற்றுவட்ட சிலை விவகார வழக்கு ஒத்திவைப்பு!

Editor

மஹிந்த,சமல் ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

wpengine

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash