பிரதான செய்திகள்

மரிச்சிக்கட்டி மக்களுக்காக போராட்டம் நடாத்திய முல்லைத்தீவு முஸ்லிம்கள்

(றசீன் றஸ்மீன்)

மன்னார் மாவட்டத்தின் முசலி மக்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை அடுத்து, குறித்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு கோரி இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழ்ந்துவரும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் அல்காசிமி சிட்டி முல்லை ஸ்கீமில் வாழும் முல்லைத்தீவு முஸ்லிம்கள் இன்று  வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் முல்லை ஸ்கீம் நுராணிய்யா ஜூம்ஆப்பள்ளிக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

Related posts

‘தவறான போதனைகளுடனான பாடசாலைப் புத்தகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’

Editor

65ரூபாவுக்கு சிவப்பு தேங்காய்

wpengine

மீனவர் பிரச்சினை! கல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி உடனடி இடமாற்றம்

wpengine