மரம் முறிந்து விழுந்ததில் கணவன் பலி மனைவி காயம்

மாதம்பே, எகொடவத்தை வீதியில் வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று (17) அதிகாலை 1.35 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

36 வயதுடைய பெண்ணொருவரே காயமடைந்துள்ளதுடன், 38 வயதுடைய பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பெண் மாதம்பை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 2088021034Tree

குறித்த இருவரும் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளதுடன், பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து அவர்களை மீட்கும் போது கணவன் உயிரிழந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததால் வீட்டிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares