பிரதான செய்திகள்

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்! மைத்திரிக்கு கடிதம்

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
18 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் திட்டத்தை கைவிடுமாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் குமி நாய்டு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் மீளவும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதனை எதிர்த்து இணைய வழி மகஜர் ஒன்றில் கையபொப்பங்கள் திரட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சிறைக் கைதிகளுக்காக தாம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கு தசாப்த காலமாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை எனவும் மீளவும் அவற்றை அமுல்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

வன்னி மக்களின் 70% வித சமூர்த்தி தேவை பற்றி பேசாத மஸ்தான் (பா.உ)

wpengine

மஸ்தானுக்கு பிரதி அமைச்சு! இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

wpengine

அஸ்வெசும மேன்முறையீடுகளை கணினி கட்டமைப்பிற்குள் உள்ளடக்குவதற்கான கால அவகாசம் நிறைவு!

Editor