பிரதான செய்திகள்

மன்னார் வைத்தியசாலை ஊழியர்கள் அராஜகம்! மக்கள் பாதிப்பு

இன்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் பார்வையாளர் நேரத்தின் பொழுது நிருவாகத்தின் திடீர் முடிவின் படி பார்வையாளர்களுக்கான அனுமதி அட்டை  கொண்டு வந்தவர்கள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் எனவும் அவ்வாறு பார்வையாளர்கள் அட்டை பெறாதவர்கள் உள்ளே  நுழைய முடியாது எனவும் கூறப்பட்டது.

இதன்போது ஏன் இதை நீங்கள் மக்களுக்கு முன்னர் அறிவிக்கவில்லை எனவும் இதை ஒரு துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவேண்டும் எனவும் கேள்வி எழுப்பிய மக்கள் நாங்கள் தூர இடங்களில் இருந்து வந்திருக்கின்றோம் இவ்வாறான முறை நடைமுறை படுத்தவேண்டும் என்றால் அது நோயாளர் விடுதிக்கு முன் செயற்படுத்தலாமே ஏன் இவ்வாறு பிரதான வாயிலில் நிறுத்துகின்றீர்கள்  இதனால் நாங்கள் செல்ல முடியாத நிலை இருக்கின்றது எனவும் அவர்களிடம் கேட்டனர்.

எவ்வாறு கேள்விகளை எழுப்பிய மக்கள் மீது அங்கிருந்த ஊழியர்கள்  தவறான முறையிலும் தாங்கள் வைத்தியசாலை சீருடையில் இருக்கின்றோம் எங்களோடு  அதிகம் கதைத்தால் அனைவரையும் பொலிசாரிடம் ஒப்படைப்போம் என்று தகாத முறைகளில் பேசிய வீடியோ ஆதாரம் இருக்கின்றது.

இவ்வாறு பார்வையாளர்களை அவமரியாதையாக ஊழியர்கள் பேசுவதினாலேயே மன்னார் வைத்திய சாலைக்கு வரும் பார்வையாளர்கள் அவர்களுடன் முரண் பட வேண்டிய நிலை இருக்கின்றது இதனை கேள்வி கூட கேட்க முடியாத நிலைக்குத்தான் இன்றைய மன்னார் மக்களின் நிலை இருக்கின்றது.

Related posts

க.பொ.த.(சா/த) பரீட்சை பெறுபேற்று பகுப்பாய்வில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கடைசி இடம்

wpengine

தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா, றிசாட் எம் . பி . மற்றும் மலேசிய தூதுவர் சிறப்பு விருந்தினராக வருகை.!

Maash

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு! மேலும் பல நன்மைகள் அமைச்சர் றிஷாட்

wpengine