பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-வவுனியா வீதியில் முதியோர் மீது தாக்குதல்

வவுனியா பட்டானிச்சூர் மூன்றாம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில் முதியவர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரை மோதித் தள்ளியதுடன் 500 மீற்றர் தூரம் பயணித்து தரித்து நின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் முதியவர் காயமடைந்துள்ளார்.

Related posts

மன்னாரில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலை உடைப்பு, ஒருவர் கைது..!

Maash

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு அமைச்சர் றிஷாட்

wpengine

முசலி கல்வி கோட்டத்தில் நான்கு மாணவிகள் மட்டுமே சித்தி

wpengine