மன்னார் வவுனியாவில் சுகாதார சேவைகள் சாரதிகள் சுகவீன விடுப்பு போராட்டம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் மாகாணம் தழுவிய ரீதியில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் நாளையும் (09) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றி வரும் சாரதிகளை, சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த சுகவீனவிடுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னாலும் வவுனியா மாவட்ட  சுகாதார திணைக்கள சாரதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள் முன்னெடுத்த போராட்ட பகுதிக்கு வருகை தந்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம், மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares