மன்னார் வலயக்கல்வி பணிப்பாளரின் அசமந்தபோக்கு!முசலி கோட்டக்கல்வி பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை?

மன்னார் மாவட்டத்தில் முசலி கல்வி கோட்டத்திற்கு நிரந்தரமான வலயக்கல்வி பணிப்பாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை என முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.


முசலி பிரதேசத்திற்கான முன்னால் வலயக்கோட்ட கல்விப்பணிப்பாளர் மரணித்து கடந்த ஒரு மாதங்கள் சென்றும் இதுவரையில் நிரந்தரமான பணிப்பாளரை நியமிக்க யாரும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.


முசலி பிரதேச கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழ் சுமார் 24 மாகாண பாடசாலையும் அத்துடன் ஒரு தேசிய பாடசாலையும் காணப்படுகின்றது.


நிரந்தரமான கோட்டக்கல்வி பணிப்பாளர் நியமிக்கப்படாமையினால் முசலி பிரதேச பாடசாலை நிர்வாகம் சிரான முறையில் இயங்க முடியாத நிலை காணப்படுவதாக முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares