மன்னார் ரயிலில் மோதி தற்கொலையா? உடல் மன்னார் வைத்தியசாலையில்

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி இன்று வியாழக்கிழமை காலை சென்ற ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மன்னார் சௌத்பார் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நேற்று புதன்கிழமை(7) இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற ரயில் மன்னார் சௌத்பார் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த நபர் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது.சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் மீட்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் உயிரிழந்தவர் தற்கொலைசெய்து கொண்டாரா என்பது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares