மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம்

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இன்று காலை 5.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது, வேட்டையார் முறிப்பு பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

mannar_acci_3இதன்போது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.mannar_acci_2

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.mannar_acci_5

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares