பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மேலதிக அரசாங்க அதிபருக்கு இடமாற்றம்! பிரியாவிடை நிகழ்வு

மன்னார் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ். குணபாலன் அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று(2) மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவருக்கு நினைவுச்சின்னம், நினைவுப்பரிசில்களும் அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

Related posts

கல்முனை விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா,வியாழந்திரன்

wpengine

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பாரிய தோல்வியினை கண்ட ஐ.தே.க

wpengine

WhatApp யில் புதிய விடயம்! பாவிப்போர் கவனம் செலுத்தவும்.

wpengine