பிரதான செய்திகள்

மன்னார், முசலி பிரதேச சபையின் உறுப்பினர் பாயிஸ் மறைவானது பெரும் கவலை! றிஷாட்

மன்னார், முசலி பிரதேச சபையின் உறுப்பினர் ஜே.எம்.பாயிஸ் அவர்களின் மறைவானது பெரும் கவலையினை தருவதாகவும், அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஆரம்ப காலங்களில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமிக்க ஒருவராகவும் மர்ஹூம் பாயிஸ் அவர்கள் காணப்பட்டதுடன், எல்லா சந்தர்ப்பங்களிலும் சமூகம் சார்ந்த சிந்தனைகளுடன் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

மன்னார் மாவட்ட மக்களுக்கும், தாம் பிரதிநிதித்துவப்படுத்திய முசலி பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இன, மத வேறுபாடுகளின்றி, மூவின மக்களுக்குமான சேவைகளை மேற்கொள்வதில் மர்ஹூம் பாயிஸின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்பட்டவையாக இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, நிதானத்துடன் செயற்படும் ஒரு அரசியல்வாதியாகவும் நான் அவரை பார்க்கின்றேன்.

அன்னாரது திடீர் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், மர்ஹூம் பாயிஸின் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்மிகு சுவன வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றேன். அதேபோன்று எமது கட்சி அங்கத்தினர்களையும் அவருக்காக பிரார்த்திக்குமாறும் வேண்டிக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆறுகளை அண்மித்த காடுகள் அழிக்கபட்டால் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

wpengine

ஜனாதிபதி சொல்வதொன்று செய்வதொன்று- இது வரை இனப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை!மனோ சாடல்

Editor

மன்னார் பிரதேச சபை ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

wpengine