மன்னார் மின்சார சபையின் அசமந்தபோக்கு! மூடக்கப்பட்ட முசலி பிரதேசம்! மக்கள் பாதிப்பு

கடந்த 31 ஆம் திகதி அதிகாலை மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் பெய்த இடியுடன் கூடிய மழை,காரணமாக முசலி பிரதேசத்திற்கான 2ஆம் திகதி காலை 3மணிவரை மின்சாரம் இல்லாமையினால் முசலி பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இரவு நேரங்களில் பாடசாலை மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமங்களையும்,பாதிப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்கள்.


இது தொடர்பில் மன்னார் மின்சார சபை உரிய பொறிமுறையினை கையாண்டு இவ்வாறான பிரச்சினைகள் எற்படும் போது உடனடியாக மின்சார இணைப்புக்களை வழங்க பொறிமுறையினை கொண்டுவர வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares