பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.


மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் இணை ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து தமிழர் பண்பாட்டு பேரணி ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் நகர மண்டபத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஜனாப் மக்கள் காதர் அரங்கில் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன், சர்வமத தலைவர்கள், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு அகிய 5 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் இன,மத வேறுபாடின்றி தலைமன்னாரில் காணி பத்திரம்

wpengine

அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு : பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன

wpengine

முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine