பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படவில்லை

மன்னார் மாவட்டத்தில் நகர் பகுதியில் இயங்கி வரும் மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று வங்கி முகாமையாளர் தலைமையில் நடைபெற்றன.

இதன் போது சமுர்த்தி சங்கங்களின் கட்டுபாட்டு சபை உறுப்பினர்கள் கூட்டத்திற்கு கலந்துகொண்டால் தூர இடங்களில் இருந்து வரும் உறுப்பினர்களின் போக்குவரத்து வசதிக்காக 500/- ரூபா பணம் வழங்க வேண்டும்.

ஆனால் மன்னார் மத்தி  சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட கட்டுபாட்டு சபை உறுப்பினர்களுக்கு உரித்தான 500/-ரூபா பணம் வழங்கவில்லை அத்துடன் கலந்துகொண்டோர்களின் கையொப்பம் கூட பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அறியமுடிகின்றன.

இந்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,சமுர்த்தி பிரதி ஆணையாளர் கவனம் செலுத்த வேண்டும்மென கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

வடகொரியாவில் 15 கப்பல்களில் அழுகிய நிலையில் சடலங்கள்

wpengine

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மஹிந்தவுடன்,பசில், மைத்திரி

wpengine

வவுனியா பேருந்து நிலையம் தொடரும் போராட்டம்

wpengine