Breaking
Mon. Nov 25th, 2024

மன்னார் மாவட்டத்தில் மன்னார்  நகர பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த பல வருடகாலமாக வங்கி முகாமையாளராக கடமையாற்றும் த.திலக் பிர்ணான்டோவின் அராஜக நடவடிக்கை காரணமாக பயனாளி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் முஸ்லிம் பயனாளி ஒருவர் மன்னார் மத்தி சமுர்த்தி வங்கிக்கு கடனை செலுத்துவதற்காக சென்ற வேளையில் கடனை செலுத்தி விட்டு மாதாந்தம் பெறவேண்டிய சமுர்த்தி பணத்தை வங்கி முகாமையாளரிடம் வினவிய போது “உங்களுக்கு இன்று பணம் தர மாட்டேன்,நீ யாரிடமாவது சென்றாவது முறைப்பாடு செய்யுங்கள் என்றும்,பல விதமான முறையில் பயனாளியின் மனம் வேதனைப்படுத்தும் முகமாகவும்,சமுர்த்தி வங்கியில் பணம் பெற்றுக்கொள்ளும் புத்தகத்தையும் சேதப்படுத்திவுள்ளார்.

பயனாளி முகாமையாளரிடம் தெரிவிக்கையில் எதிர்வரும் வாரம் எங்களுடைய நோன்பு நாட்கள் வர இருக்கின்றன அதற்கான செலவுகள் இருக்கின்றன என தெரிவித்தும் மாதாந்தம் பெற இருக்கின்ற பணத்தை தந்துவுமாறு வேண்டிய போதும் இவ்வாறு முகாமையாளர் கேவலமான முறையில் அப்பாவி மக்கள் மீது நடந்துகொண்டார்.

வங்கி முகாமையாளரின் இந்த நடவடிக்கை பற்றி பிரதேச செயலாளரிடம் பயளாளிகள் தெரிவித்தும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அறியமுடிகின்றன.

சமுர்த்தி பயனாளிகளுக்குரிய மாதாந்த உதவி தொகையினை மாதாந்தம் கொடுக்க வேண்டும் என சுற்றுநிருபங்கள் இருக்கின்ற போதும் பல சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் தனக்கு தேவையான முறையிலும்,விருப்பம் போலவும் நடந்துகொள்ளுகின்றார்கள்.

இது தொடர்பில் மக்கள் பிரநிதிகள் சமுர்த்தி அமைச்சர்,வன்னி மாவட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இந்த முகாமையாளர் மீது பல முறைப்பாடுகள் இருக்கின்ற போதும் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

One thought on “மன்னார் மத்தி சமுர்த்தி வங்கி முகாமையாளரின் அராஜகம்! பயனாளி பாதிப்பு நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள்”
  1. முகநூல் நண்பரே மேற்படி தகவல் தொடர்பான கிராமத்துக்குரிய உத்தியோகத்தர் என்ற வகையில் தங்களால் கூறிய முகாமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டு தவறானது .என்பதுடன் தயவு செய்து தவறான இப்பதிவினை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *