பிரதான செய்திகள்

மன்னார், மடு வலயத்தில் கடும் வறட்சி! கவனம் செலுத்துமா மன்னார் வலயம்

மன்னார் மடு வலயப் பாடசாலைகளில் 6,200 மாணவர்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அதிக வெப்பம் காரணமாக மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளில் அவதானம் செலுத்த முடியாது உள்ளதாக மடு வலயக் கல்விப் பணிப்பாளர் லூட்ஸ் மாலினி வெனிற்ரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வடமாகாணங்களில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக விவசாயத்துறை, கால்நடை வளர்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் போன்றன பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளும் பண்ணையாளர்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் பாடசாலைகளிலும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இதன்காரணமாக பாடசாலை மாணவர்களும் சிரமப்படுவதாக மடு வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மன்னார் மடு வலயத்தில் உள்ள 52 பாடசாலைகளில் 20 பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

தேவம்பிட்டி, மூன்றாம்பிட்டி, பாலம்பிட்டி, தட்சணாமருதமடு, கட்டை அடம்பன் ஆகிய பாடசாலைகள் இதில் அடங்குகின்றன. பிரதேச சபைகள் பாடசாலைகளுக்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டுள்ளன.

குடிநீர் விநியோகம் இடம்பெறாத பாடசாலைகளில் குடிநீரை மாணவர்கள் வீட்டில் இருந்தே கொண்டு வருமாறு பாடசாலை அதிபர்கள் அறிவித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம்! முடிந்தால் தலையை வெட்டுங்கள்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவால்!

wpengine

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine

ரஞ்சனை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றும் அரசாங்கத்தின் சூழ்ச்சி

wpengine