பிரதான செய்திகள்

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வேலை நாட்களில் வெளி நோயாளர் பிரிவு சேவைகள் அனைத்தும் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் பிரிவு சேவைகள் அனைத்தும் மாலை 4.30 மணி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நொயாளர் பிரிவு காலை முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்துள்ளது.

ஆனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின் சேவைகள் மாலை 4.30 மணியுடன் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாலை 4.30 மணிக்கு பின்னர் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகின்ற நோயாளர்களின் நோயின் தன்மை கருதி அவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.

இதனால் ஏற்படுகின்ற இடையூறுகளுக்கு நாம் வருந்துகின்றோம்.எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள சின்னாற்றுக்குள் சடலம்..!!

Maash

பள்ளிவாசல் மீது தாக்குதல்! வித்தியாசமான தண்டனை

wpengine

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்.

Maash