பிரதான செய்திகள்

மன்னார் பிரச்சினை வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினைகள் சீர் செய்ய மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் எதுவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியினர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

குறித்த நோயாளர் விடுதி தற்காலிக விடுதியாக காணப்படுகின்ற போதும் அதிகளவான நோயாளர்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளர் விடுதி 3 மற்றும் 4இற்கு செல்லும் பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் காணப்படுகின்றன.
குறிப்பாக கழிவு நீர் தேங்கி நிற்பதோடு, நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பெண் இல்லை! ஹக்கீம் நிராகரிப்பு

wpengine

தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.

wpengine

ஐக்கிய தேசிய கட்சிக்குள்! பிரதமர் பதவி மோகம்

wpengine