செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் பகுதியில் 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.

சுமார் 28 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இதன் சந்தை பெறுமதி 42 லட்சம் என தெரிய வந்துள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நல்லாட்சி அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவில்லை

wpengine

19வருடகாலமாக முசலி பிரதேச செயலகத்தில் எழுதுனர்! கவனம் செலுத்தாத மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

சுயநல அரசியலுக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் சத்தார்

wpengine