மன்னார் நகர பிரதேச செயலாளரின் பொது மக்களுக்கான அறிவித்தல்

எமது நாட்டில் வேகமாக பரவி வரும் covid-19 வைரஸ் தொற்று காரணமாக எமது பிரதேசங்களிலும் கொரோனா தொற்று பரவிக்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .


எனவே தொற்றிலிருந்து உங்களையும் ஏனையோர்களையும் பாதுகாப்பதற்கு பின்வரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

1.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டிலிருந்து வெளியே செல்லவும்.

2.அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதாகும்.

3.கைகளை சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் தொற்று நீக்கி மூலம் சுத்தப்படுத்தவும்.

4.அனைத்து சந்தர்ப்பங்களிலும் இருவருக்கிடையே குறைந்தது 1m இடைவெளியை பேணவும்.

5.தற்போதைய சூழ்நிலையில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பது சிறந்ததாகும்.

மேற்குறிப்பிட்ட சுகாதார நடைமுறை களை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோர் குறிப்பாக கொழும்பு,கம்பஹா மற்றும் பத்தளம் ஆகிய மாவட்டங்களிலிருந்து வருகை தந்தோர் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares