பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலக கிராம சேவையாளரின் அசமந்த போக்கு! பாதிக்கப்பட்ட 416 குடும்பங்கள்

மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற சவூத் பார் கிராம சேவையாளர் பகுதியில் வசிக்கின்ற  மக்களுக்கு உரிய முறையில் வரட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் இன்று காலை கிராம மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகை ஈட்டுள்ளனர்.

சவூத் பார் கிராம சேவையாளர் பிரிவில் 476 குடும்பங்கள் வசித்து வருகின்ற போதும் கிராம சேவையாளரின் அசமந்த போக்கினால் சுமார் 60குடும்பங்களுக்கு மட்டும் வரட்சி நிவாரணம் கிடைக்கப்பெற்றுள்ளது. என்றும் அது போன்று அந்த கிராமத்தில் உள்ள தலைவரை கிராம சேவையாளர் மிகவும் கேவலமான முறையில் பேசியும்,நடந்து கொண்டுள்ளார். என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்களின் கோரிக்கையினை கூட கேட்காமலும்  பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வுகளை கொடுக்காமல் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவையாளர் மக்களின் கோரிக்கையின் செவிமடுக்காமல் இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

 அதன் பின்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து உரிய கோரிக்கையினை வழங்கியதாகவும் அறியமுடிகின்றது.

Related posts

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

wpengine

மௌலவி புர்ஹானுத்தீன் மறைவுக்கு  றிஷாட் பதியுதீன் அனுதாபம்.

wpengine

இலங்கையில் பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர்

wpengine