பிரதான செய்திகள்

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


மன்னார் நகர சபையின் 21ஆவது அமர்வு நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு சபையில் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019ஆம் ஆண்டிற்கான மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக வட்டார ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி அபிவிருத்தி பணிகள், வடிகான் அமைப்பு, குளங்கள் புனரமைப்பு, புதிய வீதிகள் அமைத்தல், கழிவு அகற்றல் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏத்தாலையில் கைது

wpengine

இஸ்லாமிய மாணவர்களை சந்தித்ததற்காக இரண்டு மாணவிகள் தாக்கப்பட்டுள்ளனர். 

wpengine

றிஷாட்டை தாக்க முட்பட்ட சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்

wpengine