பிரதான செய்திகள்

மன்னார் நகர சபையின் தீல்லுமுல்லு! பிரதேச மக்கள் விசனம்

தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக மன்னார் நகர சபை பகுதி நேற்று (25) மலை நீரினால் பாதிக்கப்பட்ட போது மன்னார் நகர சபையின் தவிசாளரும்,நகர சபை உறுப்பினர் ஒருவரும் “தீல்லுமுல்லு” ஒன்றினை செய்துள்ளார்கள் என பிரதேச மக்கள் விசனம் தெரித்துள்ளார்கள்.

மேலும் தெரிவிக்கையில்;

மழை காரணமாக நீர் தேங்கி இருந்த போது மூர்வீதி,உப்புக்குளம் மக்கள் ஜூம்மா தொழுகைக்கு என்ற வேளை கழிவு நீர் அகற்றும் போது அதற்கு அருகில் இருந்த பொது மண்ணை  “டிப்பர்” மூலம் எடுத்துக்கொண்டு மன்னார் நகர சபையின் தவிசாளரின் வீட்டிற்கு தேவையான வீதியினையும் அது போல் தவிசாளரின் வீட்டு வளாகத்தையும் பொது மண்ணைக்கொண்டு நிரப்பிவுள்ளார்கள்.

இதனை மேற்பார்வை செய்த மன்னார் நகர சபையின் உறுப்பினர் மீது பிரதேச மக்கள் விசனத்தை தெரிவித்துள்ளார்கள்.

சேவை என்ற போர்வையில் பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் மக்கள் பிரதிநிதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளார்கள்.

மழை காலத்தில் நீர் தேங்கும் பிரதேசங்களை இனம் கண்டு வடிகால் அமைக்கும் திட்டங்களை ஏன் நகர சபையின் தவிசாளர் இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் கேள்விகளையும் பிரதேச மக்கள் தொடுத்துள்ளார்கள்.

Related posts

கிரிக்கெட் விளையாடப்படாமல் இருக்கும் பாடசாலைகளில் ஆரம்பிக்கும் திட்டம், வடக்கில் இருந்து ஆரம்பம் .

Maash

பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது! பாதுகாப்பு அமைச்சு

wpengine

அடிப்படை உரிமைகளில் ஆழ ஊடுருவும் PTA

wpengine