அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் நகரசபை தவிசாளர் தெரிவின் போது, தடுத்து வைக்கப்பட்டதாக கங்காரு கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு..!

மன்னார் நகரசபை தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவின் போது நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான தன் கட்சியினரே தன்னை அமர்வுக்கு செல்ல முடியாத வகையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் தடுத்து வைத்ததாக நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் நேற்றைய தினம் (9) பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி மன்னார் நகரசபையின் தலைவர்,உப தலைவர் தெரிவின் போது மஸ்தான் தலைமையில் தொழிலாளர் கட்சி சார்பாக போனஸ் ஆசனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர் ஜோன் பொலின்டன் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறான பின்னணியில் தன்னை சபை அமர்வுக்கு வரவிடாமல் தனது கட்சியின் தலைவரும் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் தடுத்து வைத்ததாகவும் அதன் காரணமாக தான் சபை அமர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் தலைவர் தெரிவின் போது தனது ஜனநாயக உரிமையை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த விடயத்தை கூட்டறிக்கையில் விடுமுறை என தெரிவித்த நிலையில் ஏனைய உறுப்பினர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் குறித்த உறுப்பினரால் நகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சபையில் வாசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குறித்த உறுப்பினருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி தொடர்பில் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

Related posts

வங்கி அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

wpengine

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor